ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி - பழனி

 

palani templeமுருகனின் “ஆறு படை” வீடுகளில் பழனி “மூன்றாம் படை” வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் ரசவாத கலையை பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் ஸ்தாபித்தது தான். புராணங்களின் படி “ஞானப்பழத்தை” சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான். தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன். பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது “பழம் நீ - நீயே ஞானவடிவானவன்” என்று அவ்வையார் முருகனை போற்றி பாடினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி” என்ற பெயர் வர காரணமாயிற்று.

திருப்பரங்குன்றம் - சுப்ரமண்ய ஸ்வாமி (அறுபடைவீடு)

 

Thirupparankundramதிருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.

திருச்செந்தூர் - ஸ்ரீ சுப்ரஹ்மன்ய ஸ்வாமி (அறுபடைவீடு)

 

thiruchendurமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார்.

ஸ்தல புராணம்: தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து தோன்றிய முருகப்பெருமான், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொள்ள இங்கு வந்தார். தேவர்களின் குருவான வியாழ பகவான் சூரபத்மனை வதம் செய்ய வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, சூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.

ஸ்வாமிமலை - ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி (அறுபடைவீடு)

 

Swamimalaiமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவத திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. இங்கு ஸ்வாமிநாத ஸ்வாமியாக முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

ஸ்தல புராணம்: ஸ்ருஷ்டிக்கும் (படைக்கும்) கடவுளான பிரம்மதேவன் ஒருமுறை ஈசனை காண கைலாயம் வந்திருந்தார் அப்போது முருகப்பெருமான் வணங்கியதை கூட கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் சென்று விட்டார். படைக்கும் தொழிலில் ஆணவம் கொண்டிருந்த பிரஹ்ம தேவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிய முருகப்பெருமான், பிரம்மாவிடம் "ஓம்" என்ற பிரணவத்திற்க்கு பொருள் கேட்க கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். படைக்கும் கடவுளான பிரஹ்மதேவநே சிறைப்பட்டதால் பிரபஞ்சதில் ஜீவராசிகளின் சிருஷ்டி நின்று விட, வைகுண்டதிலிருந்து பெருமாள் மற்றும் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

பழமுதிர்ச்சோலை - ஸ்ரீ சுப்ரமண்ய  ஸ்வாமி (அறுபடைவீடு)

 

PalamudhirCholaiமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது. தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். "அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

ஸ்தல வரலாறு : தமிழ் மூதாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் பழமுதிர்சோலை வழியே வந்து கொண்டு இருந்தால். அவ்வை பாட்டியின் களைப்பை போக்கி முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து இந்த உலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்த முருகன்  மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!