ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி - பழனி

 

palani templeமுருகனின் “ஆறு படை” வீடுகளில் பழனி “மூன்றாம் படை” வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் ரசவாத கலையை பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் ஸ்தாபித்தது தான். புராணங்களின் படி “ஞானப்பழத்தை” சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான். தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன். பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது “பழம் நீ - நீயே ஞானவடிவானவன்” என்று அவ்வையார் முருகனை போற்றி பாடினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி” என்ற பெயர் வர காரணமாயிற்று.

வேதாரண்யம் - திருமறைக்காடு - புவனி விடங்கர்

(ஹம்சபாத நடனம்)

ஸ்வாமி : திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்பாள் : வேதநாயகி
தல விருட்சம் : வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் : வேததீர்த்தம், மணிகர்ணிகை
புராண பெயர்:  திருமறைக்காடு
பாடியவர்கள் : சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

திருநள்ளாறு - நாக விடங்கர்

(உன்மத்த நடனம்)

ஸ்வாமி : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
ஸ்தல வ்ருக்ஷம் : தர்ப்பை
தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
புராண பெயர் : திருநள்ளாறு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

திருவாய்மூர் - நீலவிடங்கர்

(தாமரை நடனம்)

ஸ்வாமி : வாய்மூர்நாதர்
அம்பாள் : க்ஷீரோப வசனி, பாலின் நன்மொழியாள்
ஸ்தல வ்ருக்ஷம் : பலா மரம்
தீர்த்தம் : சூரியதீர்த்தம்
புராண பெயர்: திருத்தென் திருவாய்மூர்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர்
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருக்குவளை - அவனிவிடங்கர்

பிருங்க நடனம் (வண்டு நடனம்)

ஸ்வாமி : பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர்
அம்பாள் : வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை
ஸ்தல வ்ருக்ஷம் : தேத்தா மரம், தேற்கு மரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
புராண பெயர்: திருக்கோளிலி, திருக்குவளை
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!