ஆன்மீக மெய்யன்பர்களுக்கு  வணக்கம்!!!

உலக மக்கள் முறையான தெளிவான ஆன்மீக விஷயங்கள், ஆகம, வேத, புராண, இதிகாசங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், ஆன்மீகம் சம்பந்தமான சந்தேகங்களை அறிந்து கொள்ளவும், ஆதி சைவ சிவாச்சாரியார்களின் பெருமைகளை எடுத்துரைக்கவும், உலகெங்கும் இருக்ககூடிய பிரசித்தி பெற்ற ஆலயங்களின் விபரங்கள், ஸ்தல வரலாறுகள் பற்றி தெரிந்து கொள்ளவும் sivachariyar.com என்ற இணையதளம் துவங்கி உள்ளோம்.

மேலும் உலகெங்கும் இருக்க கூடிய சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய அர்ச்சகர்கள், சாஸ்த்ரிகள் பயிற்சி பெரும்  பாடசாலைகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் பெருமைகள் பற்றியும், தமிழுக்காகவும், சைவ சமயதிற்காகவும் தொண்டாற்றிய பல சிவாச்சாரியார்களை பற்றியும் சேகரித்து வருகிறோம், விபரம் அறிந்த ஆன்மீக பெரியோர்கள் நமது இணையதள மின்னஞ்சல் முகவரி அல்லது whatsapp எண்ணிர்க்கு அனுப்பி வைக்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இணையதளத்தில் சிவாச்சாரியர்கள் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் ,சிவாச்சாரிய பெருமக்கள் நமது இணயதளத்தில் பதிவு செய்வதன் மூலம் ,ஆன்மீக மெய்யன்பர்கள் தங்களது ஊர்களில் மற்றும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் சிவாச்சாரியர்களை தெரிந்து கொள்ளவும், ஹோமம், பூஜைகள் மற்றும் வீட்டில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கு தொடர்பு கொள்ளவும் முடியும்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!