நமது பாரத தேசம் கலாச்சாரமும், இறைநம்பிக்கையும் கொண்ட நாடாக விளங்கி வருகிறது, நமது ஹிந்து மதம் சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம், என்று ஆறு பிரிவுகளை கொண்டது, ஆதிசங்கரரின் காலத்திலேயே அவை ஒன்றுக்குள் ஒன்றாய் கலக்கத் தொடங்கியிருந்தன. தற்காலத்தில் இந்த ஆறு சமயங்களும் இரு பெரும் சமயங்களாக - சைவம், வைணவம் என உருமாறி நிற்கின்றன. சிவபெருமானை முழுமுதற்க் கடவுளாக கொண்ட சைவத்திர்க்கு இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவஸ்தலங்களே சிறப்பைப் பெற்றிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டு பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது "ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுத்து ஒழுங்கு படுத்தப்பட்டன. சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன.
இந்த பன்னிரு திருமுறைகளும் இப்பொழுது நாம் நாயன்மார்களாக வழிபடும் சிவனடியார்களால் இயற்றபெற்றது. இவர்கள் திருமுறைகள் பாடி சிவபெருமானுடைய பரிபூரண அருளை பெற்றார்கள், நாமும் திருமுறைகளை தினமும் ஓதி பரம்பொருளாகிய பரமேஸ்வரனுடைய பரிபூரண அருளை பெறுவோமாக.
பாடல் பெற்ற ஸ்தலங்கள்
1 | 32 | |
2 | நடுநாட்டு ஸ்தலங்கள் | 22 |
3 | சோழநாடு - காவிரி வடகரை ஸ்தலங்கள் | 63 |
4 | சோழநாடு - காவிரி தென்கரை ஸ்தலங்கள் | 128 |
5 | பாண்டியநாட்டு ஸ்தலங்கள் | 14 |
6 | கொங்குநாட்டு ஸ்தலங்கள் | 07 |
7 | துளுவ நாட்டு ஸ்தலங்கள் | 01 |
8 | ஈழநாட்டு ஸ்தலங்கள் | 02 |
9 | வட நாட்டு ஸ்தலங்கள் | 05 |
10 | மலைநாட்டு ஸ்தலங்கள் | 01 |
11 | புதிய ஸ்தலங்கள் | 02 |