திருநள்ளாறு - நாக விடங்கர்

(உன்மத்த நடனம்)

ஸ்வாமி : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
ஸ்தல வ்ருக்ஷம் : தர்ப்பை
தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
புராண பெயர் : திருநள்ளாறு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர்

(பாராவார தரங்க நடனம்  - கடல் அலை நடனம்)

ஸ்வாமி : காயாரோகணேஸ்வரர்
அம்பாள்: நீலாயதாட்சி
உற்சவர்: சந்திரசேகரர்
ஸ்தல விருட்சம்: மாமரம்
தீர்த்தம்: புண்டரீக தீர்த்தம்
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள்: அப்பர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: நாகை காரோணம்

திருக்குவளை - அவனிவிடங்கர்

பிருங்க நடனம் (வண்டு நடனம்)

ஸ்வாமி : பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர்
அம்பாள் : வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை
ஸ்தல வ்ருக்ஷம் : தேத்தா மரம், தேற்கு மரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
புராண பெயர்: திருக்கோளிலி, திருக்குவளை
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு அங்காரகன் ஸ்தலம் - வைதீஸ்வரன் கோயில்

ஸ்வாமி : ஸ்ரீ  வைத்யநாதர்
அம்பாள்: ஸ்ரீ  தையல்நாயகி 
அங்காரகன் மேற்க்கு திசையை நோக்கி அருள் பாலிக்கின்றார்

Vaitheeswaran koilசுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும். அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு.  சிவபெருமான் உமா தேவியைப் பிரிந்து கல்லால மரத்தின் கீழ் யோகத்திலிருந்தபோது , அவரது நெற்றிக் கண் நீர்த்துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன்  தோன்றி சிவபெருமானை வணங்கினார். அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார். அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். 

அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் தந்தருளினார்,  “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” எனவும் வரம் அளித்தார்.

இக்கோவிலுக்குள் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி , இறைவன் வைத்திய நாதரையும் அம்மை தையல் நாயகியையும் வழிபட்டே அங்காரகன் கிரக பதவியை அடைந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன, இதனால் இத்தலத்தில் உள்ள சித்தமராத குளத்தில் நீராடினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 

Temple details will be updating soon...

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!