அருள்மிகு சூரியன் ஸ்தலம் - சூரியனார்கோயில்

ஸ்வாமி: ஸ்ரீ சூரிய பகவான் 
அம்பாள்: ஸ்ரீ உஷா தேவி , ஸ்ரீ பிரத்யுஷா தேவி 
சூரிய பகவான் மேற்க்கு நோக்கி காட்சி அளிக்கிறார்


சரயனர கவலஸ்தல வரலாறு: ஒன்பது க்ரஹங்களில்  சூரியன் முதன்மையானதாகும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 - கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்தில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றது, இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர். மேலும் மற்ற எட்டு கிரஹங்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.  இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது பின்னாளில் அவருக்கு தொழுநோய் பிடிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு ஒன்பது தேவர்களும் காட்சியளித்தனர். காலவ முனிவர் தம்மை தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமலிருக்க வரம் கேட்டார். ஒன்பது கிரஹங்களும் வரமளித்து மறைந்தனர்.

படைப்புக் கடவுளான நான்முகன் ஒன்பது கிரஹங்களையும் அழைத்து "உயிர்களாய்ப் பிறந்த அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த முனிவருக்கு வர இருந்த நோய் உங்களுக்கு வரும்" என்று சாபம் கொடுத்தார். அவர்கள் சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம் இருந்தனர். பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் முப்பெருங்கடவுளரும் காட்சி தந்தனர். "உங்களைப் பிடித்திருந்த தொழுநோய் தொலைந்துவிட்டது. இன்று முதல் இவ்விடத்தில் துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்" என்று வரம் தந்தனர். சூரிய பகவான் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும் என்று அருள் புரிந்தார்.

கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம். அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான அஸ்வம் (குதிரை)  இருக்கிறது.  நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவ கிரஹங்களுக்கும் தனித்தனி சன்னிதியாக அமைந்தது இத்தலத்தின் சிறப்பு . மற்ற நவக்ரஹ தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர். இங்கு திருமணக்கோலத்தில் உஷா, பிரத்யுஷா தேவியோடு சூரியபகவான் உள்ளது தனிச்சிறப்பு. ரதசப்தமி உற்சவம் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா, இந்த கோவிலின் மிகவும் முக்கிய திருவிழா ஆகும்.

பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரும். மகா அபிஷேகம் என்று அழைக்கப்படும் இந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!