வைத்தியநாதர்- பர்லி, மகாராஷ்டிரா
மூலவர் : வைத்தியநாதர்
அம்மன்/தாயார் : தையல்நாயகி
தீர்த்தம் : பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்.
ஊர் : பரளி,பீட், மகாராஷ்டிரா
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கேதாரீஸ்வரர் - கேதர்நாத், உத்தராஞ்சல்
ஸ்வாமி : கேதாரீஸ்வரர்
அம்பாள் : கேதார கவுரி
தீர்த்தம் : உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்.
ஊர் : கேதார்நாத்,ருத்ரப்ரயாக்,உத்தராஞ்சல்
திறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
காசி விஸ்வநாதர் - வாரணாசி
ஸ்வாமி : காசி விஸ்வநாதர்
அம்பாள் : விசாலாட்சி
தீர்த்தம் : கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.
புராண பெயர் : வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.
ஊர் : காசி,வாரணாசி,உத்திர பிரதேசம்.
ஸ்ரீ குஷ்மேஸ்வரர் - அவுரங்காபாத்
ஸ்வாமி: குஷ்மேஸ்வரர் (குங்குமணேசுவரர், கிருஷ்ணேஸ்வரர்)
அம்பாள்:குங்குமணேசுவரி
தீர்த்தம் : சிவாலய தீர்த்தம், ஏலா ஆற்றின் தீர்த்தம்.
திறக்கும்நேரம்: காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.
ஸ்ரீ மல்லிகார்ஜுனர் - ஸ்ரீ சைலம்
ஸ்வாமி: மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
அம்பாள்: பிரமராம்பாள், பருப்பநாயகி
தீர்த்தம் : பாலாநதி
புராண பெயர் : திருப்பருப்பதம்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
திறக்கும்நேரம்: காலை 5 மதியம் 3 மணி, மாலை 5.30 - இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.