சிவஸ்ரீ வை. ஜகதீஸ சிவாச்சாரியார் - ஆனந்ததாண்டவபுரம்

 

ஆனந்த தாண்டவபுரம் பரம்பரை அர்ச்சகரும் ஸ்ரீ  பஞ்சவடீஸ்வர ஆலய பரம்பரை தர்மகர்த்தாவான சிவஸ்ரீ வைத்யநாத சிவாச்சாரியார் அபயாம்பாள் தம்பதிகளின் திருக்குமாரர் வை.ஜகதீஸ் சிவாச்சாரியார் அக்ஷய வருஷம் , ஆடி மாதம் 8 ம் தேதி பிறந்தார். மொழையூர் ஸ்ரீ சுந்தரேச சிவாச்சாரியாரிடம் ஆகமம்   பயிய்ன்றார். பளங்குடி ஸ்ரீ சுப்ரமணிய  சாஸ்திரிகளிடம் வேதம்  பயின்றார். ஆனந்த தாண்டவபுரம் சா. சுந்தரேச அய்யரிடம் சாஸ்திரம் பயின்றார்.

பல நூறு ஆலய கும்பாபிஷேகங்கள் நடத்தி உள்ளார். கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் சன்னதியில் தனது தந்தையாரால் சிவதீட்சை , ஆச்சாரியாபிஷேகம் செய்து பேறு பெற்றார். சீர்காழி ஸ்ரீ சங்கர மட வேத சிவாகம பாடசாலையில் காவ்ய ஆசிரியராக பணிபுரிந்தார். ஆனந்த தாண்டவபுரத்தில் சங்கர வித்யா ஆகம பாடசாலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பல ஆகம பாடசாலைகளுக்கு மூல பாடத்தை கை பிரதியாக எழுதித்தந்து உபசரித்து வருகிறார்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!