சிவஸ்ரீ T.K. சுப்ரமணிய சிவாச்சாரியார் - திருநாரையூர்
சித்தர்கள் வழிபட்ட நாரையூர் சித்தீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ சித்தநாத ஸ்வாமியை பாரம்பரியமாக பூஜித்து வரும் ஸ்ரீ குப்புசாமி சிவாச்சாரியார் மாதுஸ்ரீ அம்மாளுக்கும் சுப்ரமணிய சிவாச்சாரியார் பிறந்தார். இளம் வயதில் நாச்சியார் கோயிலில் பள்ளிப்படிப்பும் , தமிழ், ஆங்கிலமும் கற்று வந்தார். ஒன்பதாம் வயதில் உபநயனம் செய்து மாதர்வேளுர் சுந்தரரேச சிவாச்சாரியாரிடம் வேத சிவாகமங்களை குருகுல முறையில் பயின்றார். இருபதாம் வயதில் திருமணம் செய்து கொண்டு , தீக்ஷையும் பெற்றார்.
ஸ்ரீ சித்தநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் "ஆசீர்வாத சரபம்" என்ற பட்டத்தை உத்தண்டராமன் கமிஷ்னரிடம் பெற்றார். கயிலை குருமணி தருமபுர ஆதீமை 25-வது குருமஹா சன்னிதானம் சரபேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தில் 1956 ல் "சிவாகம பூஷணம்" என்ற விருதும் பெற்றுள்ளார்.
மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்று மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளார். காரைக்குடி , தேவக்கோட்டை பள்ளத்தூர் போன்ற இடங்களில் பல சிறப்புகள் பெற்றுள்ளார். இவருடைய வாரிசாக உருவானவர்கள் திருப்பந்துறை ஜகதீச சிவாச்சாரியார் குமாரர் சுரேஷ் (எ) வெங்கடேச குருக்கள். திருநாகேஸ்ர ஆலய பரமேஸ்வர குருக்கள் குமாரர் செந்தில்குமார், திருநாரையூர் மழலைமகாலட்சுமி அர்ச்சகர் ஞான சுந்தர குருக்கள் , குமாரர், நடராஜ சிவாச்சாரியார் ஆவர்.மாங்காடு - குருஸ்ரீ சிவஸ்ரீ து. சுவாமிநாத சிவாச்சாரியார். சென்னை திருப்பாலைவனம் ஸ்ரீ யோகாம்பிகா ஸமேத ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலய அர்ச்சகர் துரைசாமி குருக்கள் - கோதாவரி அம்மாள் தம்பதிகள் குமாரராக சுவாமிநாத சிவாச்சாரியார் 17-11-1944 சித்ரபானு, கார்த்திகை மாதம் , சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.
சென்னை மல்லீஸ்வரர் வேத சிவாகம பாடசாலையில் ஸ்ரீ சபாரத்ன சிவாச்சாரியாரிடம் வேதசிவாகமங்களையும், திருப்பாதிபுலியூர் பிரஹ்மஸ்ரீ மணி சாஸ்திரிகளிடம் வேதமும் பயின்றார். தனது தந்தையிடம் சிவதீட்சை பெற்று "வாமதேவசிவம்" என்னும் தீட்சா நாமம் பெற்றவர். ஸ்ரீ லோகாம்பிகா ஸ்மேத ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலயம், மாங்காடு ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் போன்றவற்றில் பூஜை செய்தவர்.
பல கும்பாபிஷேகங்களில் ஸர்வசாதகம் செய்துள்ளார். பல திருப்பணி கமிட்டியில் இருந்து , பல ஆலய கும்பாபிஷேகங்களை நடத்திஉள்ளார். பல புத்தகங்கள் வெளிவர காரணமாக இருந்தார். திருப்பாலைவனம் கும்பாபிஷேகம் திருப்பணி, நித்ய நைமித்ய பூஜை பொறுப்பு வகித்தார். ஸ்ரீ லோகாம்பிகா வேதசிவாகம வித்யாலயம் `` என்ற பாடசாலை நிறுவி அதில் 5 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமித்து 85 முதல் சுமார் 90 மாணவர்களை தமிழகத்திற்கு கற்றுணர்ந்த சிவாச்சாரியார்களாக தந்துள்ளார். இந்நிர்வாகம் தமது சொந்த பொறுப்பில் நடத்தி வந்தார்.
இவர் பெற்ற பட்டங்கள்:
"திருப்பணி செம்மல்" - சென்னை
"சிவாகம பாரதி" - ரத்னகிரி
"சிவாகம ரத்னாகரம்" -திருப்பரங்குன்றம்.