சிவஸ்ரீ இரத்தின. பாலசுப்ரமணிய குருக்கள் - சாத்தான்குடி

 

மயிலாடுதுறை வட்டம், சாத்தான்குடி அருள்தரும்  விஸ்வநாத சுவாமி உடனருள் விசாலாட்சி ஆலய பரம்பரை அர்ச்சகர் சிவஸ்ரீ இரத்னகுருக்கள் - அபயாம்பிகை தம்பதிகள் புதல்வராக பிறந்தார்.  இவரது மனைவி  வள்ளுவகுடியை சேர்ந்த நாகம்மாள்.  தனது சிறிய தந்தை சிவஸ்ரீ சாமிநாத குருக்கள் அவர்களிடம் வேத ஆகம பாடசாலை பாடங்கள் பயின்றார். அகஸ்திய கோத்திரத்தில் தோன்றியவர். அந்த காலங்களிலேயே அயல் நாடு சென்று நமது கலாச்சாரத்தையும் ,ஆன்மீகத்தையும் பரப்பி கும்பாபிஷேகங்கள் செய்து வந்தவர்.

இவர் ஆச்சாள்புரம் செட்டியார் வேதசிவாகம பாடசாலையில் ஆகமபாட ஆசிரியராகவும் இருந்தார்.  இவரிடம் பயின்றவர்களில் முக்கியமானவர்கள் சிவஸ்ரீ ஆடூர் காசி.வைத்யநாத சிவாச்சாரியார், சிவஸ்ரீ கடகம்பாடி ராஜம் சிவாச்சாரியார் ஆவர். இன்னும் ஓர் சிறப்பு ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா சுவாமிகளுடன் வேதம் ஒன்றாக படித்தவர். ஸ்ரீ சுவாமிகள் வரதம்பட்டு விஜயம் செய்த போது தம்முடைய நட்பின் காரணமாக சாத்தான்குடி வந்து சிவாச்சாரியாரை கண்டு பேசி சென்றார். சிவாச்சாரியார்கள் சிவனுக்கு கைங்கர்யம் செய்வதால் தம்மை எந்த சிவாச்சாரியாரும் நமஸ்கரிக்க ஸ்ரீ மஹா சுவாமிகள்  அனுமதிப்பதில்லை. சிவாச்சாரியாரின் பெருமைக்கு இதைவிட வேறு உண்டோ?  இப்படி ஸ்ரீ மஹா சுவாமிகள் இவரை வயதான காலத்தில் வந்து தங்களது கடந்த கால இளமையில் படித்து இருந்த விஷயங்களை உரையாடியதை கண்டு எல்லோரும் அதிசயித்தனர். பல அரிய ஆகமவிஷயங்கள் ஏட்டு சுவடிகளை பாதுகாத்து வந்தார். 1939 ம் ஆண்டு சிவசாயுஜ்யம் அடைந்தார்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!