சிவஸ்ரீ க.விஸ்வநாத சிவாச்சாரியர் - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலய பரம்பரை அர்ச்சகர் சிவஸ்ரீ ஏகாம்பர குருக்கள் - மீனாக்ஷி அம்மாள் தம்பதிகளூக்கு 1920ஆம் ஆண்டு பிறந்தார். காஞ்சிபுரம் வேதபாடசாலையிலும், குருநாதர் சோமசுந்தர குருக்களிடமும் சிவாகமம் மற்றும் சாஸ்த்ரபாடங்களை பயின்றார். காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சிவாஸ்தானம் போன்ற பல ஆலயங்களில் அர்ச்சகராக பணிபுரிந்தார்.டெல்லி உத்திர சுவாமிமலை கும்பாபிஷேகத்தில் பங்கு கொண்டு சிறப்பித்து உள்ளார் மேலும் பல கும்பாபிஷேகங்களில் சர்வசாதகராக இருந்து நடத்தி உள்ளார்.
காஞ்சி காமகோடிபீட ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமிகள் உத்தரவின்படி காஞ்சி ஸ்ரீமட ஆஸ்தான வித்வானாக பணியாற்றினார். காஞ்சிபுரம் வேதசிவாகம பாடசாலை ஆசிரியராக பணிபுரிந்தார்.
1999ம் ஆண்டு தீபாவளி அன்று சிவசாயுஜ்யம் அடைந்தார்.