சிவஸ்ரீ வி.க.அருணாசல குருக்கள் - காஞ்சிபுரம்

அருள்மிகு காமாக்ஷி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் ஆலய அர்ச்சகர் திரு வி.க.கல்யாண சுந்தர குருக்கள் - காமாக்ஷி அம்மாள் தம்பதிகளுக்கு குமாரனாக 20-1-1907ல் பிறந்தார். திருப்பாலைவனம் அமிர்தேச சிவாச்சாரியாரிடம் வேதசிவாகம சாஸ்த்ரங்களை கற்றுணர்ந்தார். தண்டையார் பேட்டை ஸ்ரீ அபீதகுசாம்பாள் உடனருள் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சகராக பணி செய்தார். திருவேற்காடு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை 1952,1964,1983,1987,1999ல் நடத்தியவர். திருவேற்காடு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம், காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், பூண்டி ஸ்ரீ ஊன்றீஸ்வரர் ஆலயம், பஞ்சேஷ்டி அகஸ்தியர் ஆலயம் மற்றும் பல ஆலயங்களில் கும்பாபிஷேக சர்வசாதகராக பணியாற்றியவர். பல ஆலய அர்ச்சகர்களுக்கு சமய, விசேஷ, நிர்வாண தீக்ஷை செய்து ஆச்சாரியாபிஷேகம் செய்து வைத்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் :-

1. கணேசர், சிவன் நித்யபூஜாவிதி,
2. விநாயகர், சுப்ரமணியர், சிவன், தேவி பிரதிஷ்டாவிதி
3. கிரியாக்ரம ஜோதி - கிரியா விளக்கம்
4. மாரியம்மன், பக்தபிரதிஷ்டைகள் ஆகியன.

1970 ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆகம பயிற்சி பாடசாலை ஆசிரியராக இருந்தார். அப்போது தமிழக முதல்வர் எம்.பக்தவத்சலம் அவர்களால் நற்சான்றிதழ் பெற்றார். சித்ரபானு வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13-11-2002) புதன்கிழமை சிவசாயுஜ்யம் அடைந்தார்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!