சிவஸ்ரீ ஐயாமணி சிவாச்சாரியார் - திருவாடானை
முச்சங்கம் வளர்த்து பலசான்றோர்களை பெருமை செய்த பாண்டி நாட்டில் திருவாடாணையில் பிறந்த ஐயாமணி சிவம் அவர்கள் இளமையிலேயே வேதசிவாகமங்களூடன், திருமுறைகள், சைவசித்தாந்தம், தமிழ் இலக்கணம், கவி இயற்றும் அளவிற்கு கற்றதுடன் ஆங்கிலத்தில் பேசும் வல்லமை பெற்று நம் நாட்டிலும் பலவெளி நாட்டிலும் பல கும்பாபிஷேகங்கள், விசேஷ யாகங்கள் நடத்தி ஆதிசைவ சமூகத்தில் ஒரு சிங்கம் போல் விளங்கி வந்தார்.
காஞ்சி சங்கர மடம், பல ஆதினங்கள் மற்றும் பொது ஸ்தாபனங்களில் பல விருதுகளும் பல பரிசுகளும் பெற்றுள்ளார். இவைகளுக்கு எல்லாம் சிகரமாக காஞ்சி பெரியவர் மஹா சுவாமிகள் இவருடைய வித்வத்தையும், திறமையையும் பாராட்டி பாரத நாட்டின் தலைநகரான டில்லி உத்திரசுவாமி மலை ஆலய கும்பாபிஷேக சர்வசாதக பொறுப்பு தந்ததுடன், இவருடைய பெயர் விபரங்களை வடமொழியிலும், தமிழிலும் ஆலய சுவற்றிலேயே கல்வெட்டாக எழுத செய்து ஆசி வழங்கினார். ஆலயம் உள்ளளவும் இவருடைய பெயரும் விளங்கி வரும். பல மாணவர்களை பல வெளி நாட்டிற்கு அழைத்து சென்றும், பல நல்ல கருத்துகளை கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.
அவரைப் பற்றி விரிவான விபரங்கள் சேகரித்துக் வருகிறோம். விபரம் அறிந்த ஆன்றோர்கள், சான்றோர்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 6374847909 என்ற Whatsapp எண்ணுக்கு அனுப்பவும். விரைவில் வெளியிடப்படும்.