சிவஸ்ரீ சுந்தரேச சிவாச்சாரியார் - திருவையாறு

திருவையாறு சிவஸ்ரீ அய்யாசாமி குருக்கள் மாதுஸ்ரீ - சங்கர பார்வதி தம்பதிகளுக்கு 15-07-1919 ஆம் ஆண்டு காச்யப கோத்திரத்தில்
பிறந்தார். வேத பாடங்களை திருவையாறு டாக்டர். சுப்ரமணிய சாஸ்த்ரிகளிடமும், ஆகம பாடங்களை மெலட்டூர் சிவப்ரிய ஸமஸ்கிருத பாடசாலையிலும், திருவையாறு அரசு கலைகல்லூரியிலும் பயின்றார்.

திருவையாறு அரசு கல்லூரியில் சமஸ்கிருத பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். சைவ சித்தாந்த பாடங்களை பழனி சிவஸ்ரீ எஸ். ஈசான சிவாச்சாரிய சுவாமிகளிடமும், திரு முத்து சு. மாணிக்கவாசக முதலியாரிடமும் கற்றுணர்ந்தார். தமிழகத்தில் 300 கும்பாபிஷேகங்களுக்கு மேல் கலந்து கொண்டார். "சதரத்ன சங்க்ரஹம்", "திரிபுர விஜய சம்பு" என்ற இரண்டு நூல்களையும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

"சிவமூர்த்தங்கள்", "சைவகால விவேகம்" என்ற நூல்களை எழுதி உள்ளார். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பாக "கவிகண்ட சித்தாந்தம்", "பகவத்கீதை" என்ற தலைப்பில் சென்னை பல்கலை கழகத்தில் சொற்பொழிவு ஆற்றினார். திருச்சி அகில இந்திய வானொலியில் "வால்மீகியும், காளிதாஸனும்", "காளிதாஸ காவியத்தில் உலகநீதி" போன்ற தலைப்பில் உரையாற்றி உள்ளார்.

"வரதட்சணை கொடுமை" என்ற சமஸ்கிருத நாடகம் எழுதி இயக்கினார். "சாகுந்தலம்", "மாளவிகானி மித்ரம்" போன்றவற்றை சமஸ்கிருத நாடகமாக தஞ்சை பால கணபதி வித்யாலயாவில் இயற்றி இயக்கினார். தவத்திரு. குன்றக்குடி அடிகளாரிடம்" சிவநெறிச்செம்மல்" என்ற விருதுடன் பொற்பதக்கமும் பெற்றார்.

                                                 அவர் புகழ் ஒங்குக.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!