சிவஸ்ரீ க.சுவாமிநாத சிவாச்சாரியார் - திருவாவடுதுறை

திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணி ஈஸ்வரர் ஆலய  பரம்பரை அர்ச்சகரான சிவஸ்ரீ கணபதி  சிவாச்சாரியார்-அலமேலு  அம்மாள் தம்பதிகளுக்கு 1901-ம் வருஷம்  சிவஸ்ரீ சுவாமிநாத தத்புருஷ  சிவாச்சாரியார் பிறந்தார். ஆரம்பகல்விக்கு பின் ஆச்சாள்புரம் வேதசிவாகம பாடசாலையில் வேதம்,  சிவாகமம் பயின்றார். வியாகரண, மீமாம்ச, சிரோன்மணி பரிட்சை தேர்வு பெற்று திருவாவடுதுறை ஆதீன வித்வானாக இருந்து ராஜகோபாலபுரம் வேத சிவாகம  பாடசாலை தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.

”மகுடாகம த்திற்கு விளக்கம்”, “ஆகம வசன பூஷணம்” போன்ற நூல்களை எழுதியுள்ளார்.பல ஆகம நூல்களை வெளியிட்டு பரிசோதகராக இருந்தார். இவருக்கு 2 ஆண் குழந்தைகளும்,2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் 1987-ல் சிவசாயுஜ்யம் அடைந்தார்.

        இவரது புகழ் ஓங்குக !

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!