சிவஸ்ரீ G.S.V. கணேச சிவாச்சாரியார் - சேலம்
சேலம் ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை உடனருள் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் பரம்பரை அர்ச்சகரும், சேலம் ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை சைவசித்தாந்த சபை, ஸ்ரீ கண்டாச்சார்ய குருபீடத்தின் பரம்பரை சிவாச்சாரியாருமான சிவஸ்ரீ சிவ சுப்ரமண்ய சிவாச்சாரியார் சகோதரர், சிவஞானசம்பந்த சிவாச்சாரியார் என்கிற விஸ்வநாத சிவாச்சாரியார், ஸ்வர்ணாம்பாள் விசாலாட்சி தம்பதிகளுக்கு தவப்புதல்வராக கணேச சிவாச்சாரியார் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்விக்கு பிறகு அல்லூர் வேதசிவாகம பாடசாலையிலும், திருப்பதியிலும் பயின்றார். தமிழ்நாடு அர்ச்சகர் சங்கத்தின் மாநில தலைவராகவும், சேலம் ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை சைவசித்தாந்த சபை, திருநாவலூர் ஸ்ரீ ஆலால சுந்தரர்மடலாய திருப்பணி குழுதலைவராகவும் இருந்து வருகிறார். தமது சொந்த பொறுப்பில் வேதசிவாகம திருமுறை பாடசாலை சேலத்தில் நடத்து வருகிறார். ஆதிசைவகுலகுரு ஸ்ரீ கண்டாச்சார்ய குரு பீடம் (சேலம்) குருவாக திகழ்ந்து வருகிறார். தமிழ் திருமுறை வளர்ச்சிக் கழகம் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். பல ஆலயங்கள் கும்பாபிஷேகங்களின் சர்வசாகராக இருந்து சிறப்பு செய்தவர். சிங்கப்பூர், மலேஷியா,அமெரிக்கா போன்ற நாடுகளில் கும்பாபிஷேகம் மற்றும் யாகங்களை செய்து சிறப்பு செய்தவர். பல சமூக, சமுதாய பணிகளை செய்து வருபவர். திருமுறை விழா என்ற விழாவை துவங்கி நால்வர் விக்ரஹத்தை அமைத்து தருவது போன்ற சிறப்பான காரியங்களை செய்து வருபவர்.
இவர் எழுதிய நூல்கள் :
1. பண்டிகைகளும், பயன்களும்,
2. சைவசமயம்,
3. தெரிந்தவை புரியாதவை,
4. சித்தாந்த ரகசியம்
போன்ற நூல்களை வெளியிட்டார். அகில உலக ஆதிசைவ நல இயக்கம் என்ற அமைப்பினை இலங்கையில் நிறுவியுள்ளார். மேலும் பல அருந்தொண்டுகளை செய்துவர எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.