சிவஸ்ரீ K.K. உமாபதி சிவாச்சாரியார் - கோவைகுறிச்சி
கோவைகுறிச்சி சிவஸ்ரீ கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார். ஸெள.சீதாலெக்ஷ்மி தம்பதிகளுக்கு சிவஸ்ரீ K.K. உமாபதி சிவாச்சாரியார் பிறந்தார். இவரது தந்தை சிவஸ்ரீ கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியாரின் பல ஆதிசைவர்கள் வாழ்வு மேம்படவும் பாடுபட்ட மஹானாவார். கொங்கு நாடு சித்தாந்த சரபம் ஈசான சிவாச்சாரியார் அவர்களை குருவாக கொண்ட இவர் அர்ச்சகர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அர்ச்சகர் சங்கம் மூலம் பாடுபட்டு வருகிறார்.
தமது இல்லத்தில் ஆதிசைவ குல மாணவர்களுக்கு வேதசிவாகமம் பயிற்று வித்துவருகிறார். கொங்குநாட்டில் பல சிவ ஆலயங்களுக்கு கும்பாபிஷேகங்கள் நடத்தி வருபவர். கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிசைவ சமுதாயத்திற்கு பல வழக்குகள் போட்டு வெற்றி கண்டவர்.