சிவஸ்ரீ B. அர்த்தநாரீஸ்வர சிவம் - பாண்டிசேரி
பாண்டிசேரி, சிவஸ்ரீ நடேச சிவாச்சாரியார் - கருணாம்பாள் தம்பதிகளுக்கு ரோமரிஷி கோத்திரத்தில் அர்த்தய்நாரீஸ்வர சிவம் பிறந்தார். வேதம்,ஆகமம் சொல்லங்கோடு சிவாச்சாரியாரிடம் பயின்று உள்ளார். மேல்நிலைக்கல்வி நிலையத்தின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்.
நாகலாந்து மாநிலத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் அமைதி குழுவில் செயலாளராக 7 ஆண்டுகள் பணிபுரிந்தார். டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் குழுவுடன் ஓராண்டு அமைதிபணியில் ஈடுபட்டார். உலக சர்வ சமய அமைதி அமைப்பில் இந்திய தேசிய செயற்குழு உறுப்பினராக 1980-ல் இருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்தியாவின் சார்பில் நேபாளம் (1991-ல்) இத்தாலி (1994) தாய்லாந்து (1996) உலக சர்வ சமய மாநாட்டில் இந்துசமய பிரதிநிதியாக கலந்து கொண்டவர். இலங்கை, ஜெர்மணி, ஹாலாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அமைதி கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளார். பாண்டிசேரியில் தெய்வ சேக்கிழார் மன்றத்தில் அமைக்கப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷித் தலைவராக பணியாற்றி உள்ளார். உலக நாடுகளில் இந்து சமய, சமதர்ம அமைதிக்காக பாடுபட்டு வருபவர். அவர் தம் தொண்டு வளரட்டும்.