சிவஸ்ரீ T.S. சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் - சென்னை

சென்னை பூவிருந்தவல்லி அருகில் உள்ள திருமழிசை என்னும் கிராமத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தார். ஆகமம், சைவசித்தாந்தம் ஆகியவற்றை சாஸ்த்ர சூடாமணி K.A.சபாரத்ன சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ சம்பந்த சிவாச்சாரியாரிடம் பயின்றார். தனது 16-வது வயதில் சென்னை அருள்தரும் ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்ற துவங்கினார். இக்கோவில் சத்ரபதி சிவாஜி மற்றும் மகாகவி பாரதியார் வழிபாடு செய்த தலமாகும். கும்பாபிஷேகம், சண்டிஹோமம் செய்வதில் தனிப் பெருமை பெற்றவர். உலகின் தொன்மையான சமயமான இந்து சமயக்கருத்துகளையும், பெருமைகளையும் எடுத்துக்கூறுவதில் சிறப்புடையவராக இருந்தார்.

இந்தியாவின் பல கோவில்களில் கும்பாபிஷேகங்கள் செய்ததுடன்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் -  ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்,

வாஷிங்டன் - ஸ்ரீ சிவாவிஷ்ணு ஆலயம்,

வாஷிங்டன் - ஸ்ரீ முருகன் ஆலயம்,

ஆல்பனி -  ஸ்ரீ சிவாவிஷ்ணு ஆலயம்,

பாஸ்டன் - ஸ்ரீ லக்ஷ்மி ஆலயம்,

பில்லாஸ் - ஸ்ரீ சிவாவிஷ்ணு ஆலயம்,

 மற்றும் ஹவாய் தீவில் உள்ள கௌவை ஆதீனத்தில் பஞ்சசிலா நியாச பூஜையும் செய்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில்

ஈஸ்ட்ஹாம் - ஸ்ரீ முருகன் ஆலயம்,

டுட்டிங் - ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்,

ஈஸ்ட்ஹாம் - லக்ஷ்மி ஆலயம்,

ஆர்ச்வே - ஸ்ரீ முருகன் ஆலயம்,

ஸ்டோன்ஸி - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்,

பர்மிங்ஹாம் சிவாலயம்,

நாஸ்டென் - கனகதுர்கா ஆலயம்,

மற்றும் மலேசியாவில் கோலாலம்பூர், பினாங்கு, சுங்காயுசிபுட், இயோன், பெட்ட்லிங் ஜெய ஆகிய இடங்களில்  கும்பாபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் பெருமையை உலகறிய செய்தவராவார்.

சிங்கப்பூர் சௌத்பிரிஜ் - ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயம், இலங்கையில் கண்டி, கதிர்காமம் ஆலயங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் 1997-ஆம் ஆண்டு பிரதமமந்திரி ஜான்ஹோவர்ட் தலைமையில் கேன்பரா மாகாணத்தில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். 1999 ஆம் ஆண்டு சிட்னி, ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கவர்னர் ஜெனரல் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்.

வேதம் ஆகமங்களின் முக்கியத்துவத்தை ஜெர்மனி, பிரான்ஸ், மொரிஷீயஸ், தாய்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பரப்பி உள்ளார். அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஒசாகா உலக சமய மாநாட்டில், இந்து சமயத்தின் சார்பாக பங்கேற்று கர்மா பற்றிய மாபெரும் உண்மைகளையும் கோவில்களில் கர்மாக்கள் செய்யப்படுகின்ற விஷயங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இவர் சைவ ஆகமங்களுக்கு ஆற்றிய தொண்டை பாராட்டி திருப்பதி திருமலை தேவஸ்தான ஆகம பாடசாலை இவரை கௌரவித்தது. தென்னிந்திய அர்ச்சகர் சங்கத் தலைவராக பணியாற்றி உள்ளார். உலகெங்கும் பல அர்ச்சகர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆலயங்களில் பணிபுரிய உதவியிருக்கிறார்.

இவர் "மாகாளிகா மந்திர் டிரஸ்டின்" நிறுவனர் ஆவார். இதில் சாதி, மத, பேதமின்றி அனைவரும் பங்கு பெற்று அன்னையை வழிபட வழிவகுத்தவர். மக்களுக்கு தொண்டு செய்வதே தமது குறிக்கோளாக கொண்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கருதியவர். உலக மக்கள் இந்து சமயத்தின் முழுப்பயனை பெற்று அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழப் பிரார்த்தனைகள் பல புரிந்தவர்.1986ல் காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசியுடன் அஸ்வமேதயாகம் நடத்தினார்.

இவர் பெற்ற பட்டங்கள் :-

சிவாகம சாஸ்த்ர நிபுணர்   -  திரு பக்தவத்சலம் - தமிழக முன்னாள் முதலமைச்சர்.

சக்தி கருணாகர சக்ரவர்த்தி  -  டாக்டர் துண்.சம்பந்தம் - மலேசிய முன்னாள் அமைச்சர்

சிவாச்சாரிய குல பூஷணம்  - தருமை ஆதீனம் ஸ்ரீ சண்முகதேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

வேதாகம ஞானகலாநிதி - லண்டன் சைவ முன்னேற்ற சங்கம்

சிவாகம ஆஸ்தான வித்வான் - வாஷிங்டன் ஸ்ரீ சிவாவிஷ்ணு ஆலயம் (USA)

அனைத்துலக சிவாகமசாம்ராட் - மலேசியா டத்தின் இந்திராணி சாமுவேல்

ஹிந்து ரிலையன்ஸ் அவார்ட் - ஹிந்து (ஹிந்து மறுமலர்ச்சி விருது).

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!