சிவமயம்
ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் சகாயம்
எல்லாம் வல்ல இறைவனான சிவபெருமான் உலகம் முழுவதும் அருள் பாலிக்கிறார். அவர் தனாகவே தோன்றியும் பல திருவிளையாடல்கள் நடத்தியும் அவதரித்த திருத்தளங்கள் பெருமைக்கூறிய இந்திய நாட்டிலே சிறப்பு மிக்க தமிழகத்தில் தான் அதிகமாக காணப்படுகின்றன.
அத்தகைய தமிழகத்திலே சிறப்பு வாய்ந்த தென்பகுதியில் திருமந்திரநகர் என போற்றுத்தற்குரிய தூத்துகுடியில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் பிரதான ஆர்ச்ககராக பணிபுரிந்து கொண்டிருப்பவர். சிவ ஸ்ரீ ரா.செல்வம் பட்டர் (எ) கல்யாண சுந்தர பட்டர். இவர் பிள்ளையர் பட்டி ஸ்ரீ கற்பக விநாயக வித்யாலயத்தில் படித்து தேர்ச்சி பெற்று, தூத்துக்குடியில் ஸ்ரீ ஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயம் என்ற திருநாமத்தோடு வேத சிவாகம பாடசாலை ஒன்று இயங்கி வருதிறது. தற்போதுதார் சுமார் 35 மாணவர்களையும் முன்னத்தாக 15 மாணவர்களுக்கு பட்டமளித்தும் சிறப்பான முறையில் நடைபெற்று வரும் இப்பாடசாலையில் வேதம், ஆகமம், திருமுறைகள், சம்ஸ்கிருதம், Spoken English, Computer போன்ற பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
அறங்காவலர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு நடைபெற்று வரும் இப்பாடசாலைக்கு தலைமை ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார். இவர் ஆற்றிவரும் சிவதொண்டு அளவிர்கறியது. மேலும் இப்பாடசாலையை சிறப்பாக நடத்திவரும் இவர் இப்பகுதியில் பல ஆலயங்களில் திருக்குடமுழுக்கு ஆற்றிய பெருமைக்குரியவர். சிறப்புமிக்க ஆலயங்களான சங்கரன் கோவில் ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தென்காசி, ஸ்ரீ காசி விஸ்வநாததர் திருக்கோவில், நவகைலாய குருஸ்தலமான முறப்பநாடு, ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில், ஆழ்வாழ் தோப்பு, ( காந்தீஸ்வரம் ) ஸ்ரீ ஏகாந்தலிங்கேஸ்வரர் திருக்கோவில், கழுகுமலை, ஸ்ரீ கழுக்காசலமூர்த்தி திருக்கோவில், குற்றாலம், ஸ்ரீ குற்றால நாதர் திருக்கோவில், ராஜபதி, ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில், போன்ற பல ஆலயங்களில் திருக்குடமுழுக்கு நடத்தி இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கப்பிராத்திப்பவர் தான் கற்ற கல்வியை மற்ற மாணவர்களும் கற்று இன்புற இவர் அற்றி வரும் சிவ தொண்டுகளில் ஒன்றாகக் கருதலம். மேலும் பல ஆகம நூல்கள் வெளியிட்டு அனைவரும் பயன்பெறும் வகையில் பணி கொண்டுருப்பவர். இவரது சிவத்தொண்டு தழைக்க எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிய இறைவனை வேண்டுவோமாக.
பெற்ற விருதுகள் : சிவகாம ரத்னம், சிவகாம செல்வர்,சர்வ சாதக சாம்ராட் ,சிவகாம விசாரத , கும்பாபிசெகத்திலகம், போதனசாரிய செம்மல்.