சிலப்பதிகாரத்தில் பிரதிஷ்டை(கும்பாபிஷேகம்)
சிலப்பதிகாரத்தில் பிரதிஷ்டை(கும்பாபிஷேகம்) பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. சேர மன்னன் கண்ணகிக்கு சிலை நிறுவ உத்தரவு பிறப்பிக்கின்றான்.
அதனை இளங்கோவடிகள்,
"கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்பு கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்."
என்று பாடுகின்றார்.அதாவது ஒரு கும்பாபிஷேகம் செய்வதற்க்கான கிரியைகளை மன்னன் வரிசையாக கூறி உத்தரவு இடுகின்றான். கும்பம் என்ற கடங்களை தயார் செய்து, பூப்பலி என்பதை இன்றைய பிரவேசபலி என்ற கிரியை செய்து, காப்புக் கடை நிறுத்தி என்ற வாஸ்து பூஜை செய்து அஷ்டதிக் பாலகர்களை பூஜித்து காப்பாக நிறுத்தி,வேள்வியும் விழாவும் நாள்தொரும் என்றபடிக்கு, இன்றைக்கு செய்வதுபோல் யாகசாலை அமைத்து நான்குகால, ஆறுகால யாகங்கள் பூஜைகள் செய்து, கடவுள் மங்கலம் என்ற கும்பாபிஷேகம் செய்ததாக சிலப்பதிகாரம் உரைக்கின்றது.
புரட்சிகாவியமான சிலப்பதிகாரத்தில்தான் யாகங்கள் செய்து கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்த அற்புத செய்தியும் உள்ளது.
நன்றி!!
தில்லை கார்த்திகேயசிவம்.