பவித்திரம் (தெற்பை) அணிவது ஏன்?? அதை எவ்வாறு அணிய வேண்டும்..??

பவித்திரம் (தெற்பை) தரிப்பது கிரியை செய்கின்ற நேரத்தில் வேறு சிந்தனை விடுத்து மனத்தை தெய்வ வழிபாட்டில் ஈடுபட பத்திரப்படுத்துவது.

இது வலது கை மோதிர விரலில் அணியப்படுவது ஏனெனில் உடலில் இருக்கின்ற நரம்புகள் அனைத்தின்னுடைய தொடர்பும் இவ் விரலில் பிரம்ம முடிச்சாக சேர்ந்திருப்பதால் இதில் தருப்பை இடுகின்ற பொருட்டு உடலில் முழுப்பகுதியும் சுத்தமாக்கப்படுகின்றது. சகல பகுதிகளிலும் இனணந்து பலன் ஏற்படுகின்றது.

வலது கை இடது கையை விட தூய்மையானது அத்துடன் காரண ஆகமத்தில் பவித்திர ஹஸ்தேன குர்யாத் அர்ச்சன கார்யம் எந்தக்கையால் விபூதி வாங்குகிறார்களோ அந்தக்கையில் பவித்திரம் போடவேண்டும் பெண்களும் வலதுகையால் தானே விபூதி வாங்குவார்கள் வீட்டுக்கு ஒருவர் வந்தால் வலதுகையால் உபசாரம் செய்வார்கள் தர்ப்பை அணிந்த கையால் உபசாரம் செய்ய வேண்டும் என்றால் பெண்கள் இடது கையில் அணிந்து உபசாரம் செய்யலாமா அது அபசாரம் எமது முன்னோரில் சிலர் பெண்கள் என்றால் இடது பக்கம் என நினைத்து தரப்பை போடும்போது இடது கையில் கொடுத்துப் பழக்கி விட்டார்கள் உண்மையில் தம்பதிகளில் தலைவன் மட்டும் தரப்பை அணியும் மரபும் உண்டு.எனவே இடது பக்கம் பெண்ணுக்கு உரியது என்றாலும் பவித்திரம் பவித்திர ஹஸ்தம் என்று சொல்லப் படும் வலதுகையில் அணியப் பழகவும்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!