Adhisaiva Sivachariyar Adhisaiva Sivachariyar

The Adisaivas are those who have been worshipping Lord Shiva for generations.

  • Login
  • Create an account
Adhisaiva Sivachariyar Adhisaiva Sivachariyar
  • Home
  • About us
    • Aadhi Saivas
    • Famous Sivachariyars
  • Temples
    • Tamilnadu temples
    • Temples of India
    • Global Temples
    • Important Temples
  • Patasalai
E-Library Contact Us

வேத சிவாகம பாடசாலைகள்

வழிபாடு என்பது பழங்காலந்தொட்டே மரபை ஒட்டியும், தேசாச்சாரத்தை ஒட்டியும், காலாசாரத்தை ஒட்டியும் நடைபெற்று வருகிறது. அடிப்படை ஒன்றாக இருந்தாலும் , மேற்கண்ட காரணங்களால் சிறிய மாறுதல்கள் இங்குமங்குமாக இருப்பது இயல்பு. அவரவர் தமக்குத் தோன்றியபடி வழிபாடுகள் செய்வதானால், நெறி கெட்டுப் போகும் நிலை உருவாகும். இது பற்றியே, நம் முன்னோர்கள் ஆலய வழிபாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார்கள். அப்படி இருந்தும், எல்லை தெய்வங்கள், காவல் தெய்வங்கள் ஆகியவற்றின் வழிபாட்டு முறைகள்  ஊருக்கு ஏற்பத்  தொடர்ந்து வருவதைக் காண்கிறோம்.

ஆகம அடிப்படையிலான வழிபாட்டில் ஆலய அமைப்பு முதல், அனைத்துக்  கிரியைகளும் விளக்கப்பட்டுத்  தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆகமக் கல்வியை சிறு வயது முதல் ஏழு ஆண்டுகளுக்குப் போதித்து, பரார்த்த பூஜைக்குத் தயார் படுத்தினார்கள்.  ஆகம பாடசாலைகள் பல இடங்களில் அமைக்கப்பெற்று மன்னர்களது ஆதரவையும்,மக்களது ஆதரவையும் பெற்றன. காலப் போக்கில் கற்போர் எண்ணிக்கை குறைந்து, பலவிடங்களில் பாடசாலைகள் மூடப் பட்டன. எஞ்சிய பாடசாலைகள், நல்ல மனம் கொண்ட அன்பர்களது ஆதரவோடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை, பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம், குடந்தை, திருவாலங்காடு, திலதைப்பதி ஆகிய ஊர்களில் நடைபெறும் சிவாகம பாடசாலைகளை சில உதாரணங்களாகக் காட்டலாம்.

வளர்ந்து வரும் நவ நாகரீக உலகில் நமது வேதாகமங்களை  வளர்பதற்கும், வேத , ஆகம, புராண, இதிகாசங்களை பற்றி உலக மக்களுக்கு எடுத்துறைப்பதற்கும் நமது சிவாச்சாரிய பெருமக்களின் பெரு முயற்சியோடும் ஆன்மீக மெய்யன்பர்கள் துணையோடும் பல வேதாகம பாடசாலைகள் நடைபெற்று வருகின்றது. தென் இந்தியாவில் உள்ள சிறந்த பாடசாலைகளை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நமது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம். சிவாச்சாரிய பெருமக்கள் தாங்கள் நடத்தி வரும் பாடசாலையின் விபரங்கள் நமது இணையதளத்தில் வெளியிட  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Daily One Slokas

𑌮𑌾𑌤𑌾𑌪𑌿𑌤𑍃 𑌮𑌲𑍋𑌦𑍍𑌭𑍂𑌤

𑌦𑍇𑌹𑍇𑌸𑍍𑌥𑌾𑌤𑍁𑌂 𑌨𑌯𑍁𑌜𑍍𑌯𑌤𑍇।

𑌤𑌸𑍍𑌮𑌾𑌮𑌾𑌨𑍍𑌮𑌨𑍍𑌤𑍍𑌰𑌮𑌯𑌃𑌕𑌾𑌰𑍍𑌯𑌃

𑌕𑍍𑌰𑌿𑌯𑌤𑍇 𑌪𑍍𑌰𑌤𑌿𑌵𑌾𑌸𑌰𑌂।

Navigate

  • Landing page
  • Home business
  • Home Magazine
  • Home Product
  • Home Logistics

Bonus pages

  • Landing page
  • Corporate
  • News/Magazine
  • Blog
  • Restaurant

Useful links

  • Business blog
  • Logistics blog
  • Product blog

Support

  • Tagged Items
  • List All Tags
  • Password Reset
  • F.A.Qs
  • Help center

Copyright © 2025 Aadhi Saiva Sivachariyar | All Rights Reserved.
Designed & Maintained by SREE WEB SOLUTIONS